×

கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறை மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் : 5 பேர் மறுவாழ்வு

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள்(35). கட்டிட தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 நாளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு சமுதாய கூட கட்டுமான பணியில் சிவபெருமாள் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

நேற்று சிவபெருமாள் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிவபெருமாளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க  உறவினர்கள் முன்வந்தனர். பின்னர், சிறப்பு மருத்துவ குழுவினர் இணைந்து சிவபெருமாளின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் 2 கண்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இதில், கல்லீரல் கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் 10 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டது. ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனைக்கும், 2 கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

Tags : Coimbatore Government Hospital , Rehabilitation,five organs,first-time, brain donor , Coimbatore Government Hospital
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...