×

தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன் விடுவிப்பு

சென்னை: தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன் விடுவிக்கப்பட்டுள்ளார். பெரியகோவில் குடமுழுக்கு விழாவுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் நேற்று கைது செய்யப்பட்டார். இது குறித்து இயக்குனர் கவுதமன் கூறியதாவது: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றபோது என்னை உளுந்தூர்பேட்டையில் வைத்து கைது செய்தனர். குறிப்பாக கைது செய்த இடத்திலேயே அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் என்னிடம் விசாரணையை தொடங்கினார்.

அவர் எங்களின் கோரிக்கையை கேட்ட போது, விமான கலசத்தில் ஓதுவார்கள், அடியார்களை அங்கு நியமிக்க வில்லை, இந்த நீதிமன்ற சட்டத்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த பிறகு, அது உண்மை என்று அவரே தெரிவித்தார். 300 பேர் கருவறை வாசலில் நின்று பாடுவதில் 88 பேர் தான் அடியார்கள், மீதம் உள்ளவர்கள் பிராமினர்கள் என்று என்று அவர் தெரிவித்தார். 4 பிராமினர்கள் மட்டும் விமான கலசத்தில் ஏறி மந்திரம் ஓத அவர்களுக்கு மட்டுமே மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் 3 பேருக்கு மட்டும் மருத்துவ சான்றிதழ் கொடுத்தனர். என்னை உளுந்தூர்பேட்டையில் கைது செய்த பிறகு தீவிரவாதிகளை போல் செல்போன்களை எடுத்துக்கொண்டு அடைத்து வைத்தனர். அதன் பிறகு நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தமிழ் உணர்வாளர்கள், தமிழர்கள், குறிப்பாக சத்தியபாமா என்ற பெண் ஓதுவார்கள் என்னை மீட்டெடுக்க வந்தனர்.  அதன் பிறகு என்னை தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா முடியும் நிலையில் என்னை விடுவித்தனர் என்று அவர் தெரிவித்தார்.


Tags : Gauthaman ,temple ,Thanjavur , Arrested, Director Gowdaman, acquitted
× RELATED பள்ளிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு...