×

விவசாயிகள் தற்கொலை பற்றி பாஜ அரசு ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை: பிரியங்கா காந்தி ஆவேசம்

புதுடெல்லி: ‘நாட்டில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை பற்றி பாஜ அரசு ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது,’ என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.  உத்தரப் பிரதேசம், பந்தல்கண்ட் பகுதியை சேர்ந்த விவசாயி கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பாஜ அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக பட்ஜெட்டில் வெற்று கூற்றுக்களை கூறிய நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பந்தல்கண்டில் விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளது அரசின் நிலைபாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கடன் தொல்லை காரணமாக, பந்தல்கண்ட் சம்பவம் போல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நிற்காது. ஆனால், பாஜ அரசானது விவசாயிகள் தற்கொலை பற்றி ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது,’ என கூறியுள்ளார்.

Tags : government ,BJP ,suicide ,Priyanka Gandhi BJP , Farmer's suicide, Baja government, Priyanka Gandhi
× RELATED ஊரடங்கை மீறி பிறந்த நாள்...