அலிகார் போராட்டத்தில் உரையாற்ற முன்னாள் ஐஜிக்கு தடை

அலிகார்:  மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான். மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தான் வகித்து வந்த போலீஸ் ஐஜி  பதவியை கடந்த டிசம்பர் மாதம் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம்  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க அந்த பல்கலைக்கழக மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்க அப்துர் ரகுமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அலிகார் வந்த அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், அவருக்கு போராட்டத்தில் உரையாற்ற தடை விதித்து உத்தரவிட்டதுடன் டெல்லிக்கு திரும்பி செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

Related Stories: