×

வீரப்பன் கூட்டத்தில் இருந்த பெண் 27 ஆண்டுக்கு பின் கைது

சாம்ராஜ்நகர்: வீரப்பன் கூட்டத்தில் இருந்து மூன்று குற்ற வழக்குகளில்  போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் ஒருவரை 27 ஆண்டுகளுக்கு பின் ேபாலீசார்  கைது செய்துள்ளனர்.  கர்நாடகா - தமிழக போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக  இருந்த வீரப்பன் கூட்டத்தில், கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், கொம்காடு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மற்றும் அவரது மனைவி செல்வமேரி  ஆகியோர் இருந்துள்ளனர். இதில் வெள்ளையன் மறைவுக்கு பின்  வேலுசாமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட செல்வமேரி, ஜாகேரியை  அடுத்த பாஸ்கல் பகுதியில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் சாம்ராஜ்நகர்  மாவட்டம், மலை மாதேஷ்வரன் மலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பாலாறு  மேம்பாலம் கடந்த 1993ம் ஆண்டு வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இவை உள்பட  மூன்று புகாரில் வீரப்பன் உள்பட  பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் செல்வமேரியும்  குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

 இந்த குற்ற வழக்கில் கடந்த 27  ஆண்டுகளாக செல்வமேரியை போலீசார் தேடி வந்தனர். அவர் இரண்டாவது திருமணம்  செய்துகொண்டு பாஸ்கல் பகுதியில் வசித்து வரும் தகவல் கொள்ளேகால் போலீஸ்  டிஒய்எஸ்பி நவீன்குமார் கவனத்திற்கு வந்தது. அதை தொடர்ந்து போலீசாருடன்  சென்று செல்வ மேரியை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்திய பின், மைசூரு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில்  செல்வமேரி அடைக்கப்பட்டார். கடந்த  1990ம் ஆண்டு செல்வமேரி அவரது மூத்த சகோதரி சந்தனமேரி மற்றும் அவரது கணவர்  சேஷராஜ் ஆகியோருடன் வசித்து வந்தார்.

 பாலாறு வன பகுதியில் சேஷராஜ் ஆடு  மேய்த்துக் கொண்டிருந்தபோது,தரையில் புதைக்கப்பட்டிருந்த லாரி டியூப்பில்இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார். இந்நிலையில்  புதைத்திருந்த பணத்தை  எடுக்க வந்த பணம் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.  வீரப்பன் நடத்திய விசாரணையில்சேஷராஜ், அவரது  மனைவி சந்தனமேரி, மைத்துனி செல்வமேரியை காட்டிற்கு அழைத்து வந்து  பணம்  பெற்றுக் கொண்டபின்,   செல்வமேரியை அவரது கூட்டத்தில் இருந்த வெள்ளையனுக்கு திருமணம் செய்து  வைத்தார்.

Tags : Veerappan ,arrest ,meeting , Veerappan meeting, woman, arrested
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்...