×

ஃபேன்ஸி ஃபுட் நத்தை!

நன்றி குங்குமம் முத்தாரம்

நத்தை, முதுகெலும்பற்ற ஓர் உயிரினம்.  நிலம், நன்னீர் நிலைகள் மற்றும் கடலில் இவை வாழ்கின்றன. ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நத்தை இனங்கள் பூமியில் உள்ளன. ஈரப்பதம் கொண்ட உடலின் மூலம் மிகக்கடினமான இடங்களிலும் எளிதில் செல்லும் திறன் கொண்டவை. ஆபத்துக்காலங் களில் உடலினை, முதுகில் இருக்கும் ஓட்டினுள் இழுத்துக்கொண்டு தங்களை பாதுகாத்து க்கொள்கின்றன. சில நத்தை இனங்கள் நீண்டகாலம் தூங்கும். கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவே இவை நீண்ட காலம் தூங்குகின்றன. உலகிலேயே மிகவும் மெதுவாக செல்லக்கூடிய வகையில் படைக்கப்பட்டுள்ள  நத்தைகள், சராசரியாக வினாடிக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்து செல்லும். இந்த இனங்களில், இரு பாலினமும் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டிருக்கின்றன. நத்தை இனங்கள்  வாழ்விடத்திற்கேற்ப 5 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. இரவில் சுறுசுறுப்புடன் இருக்கும் நத்தைக்கு கேட்கும் திறன் கிடையாது.

சில சென்டி மீட்டர் முதல் 12 இன்ச் வரை வளரும் திறன் கொண்ட நத்தை, தன்னுடைய உடல் எடையை விட 10 மடங்கு பெரிய பொருட்களைத் தூக்கிச்செல்லும் திறன் வாய்ந்தது. நத்தை மெல்லுடலி களில் வயிற்றுக்கா லிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். இவற்றின் முதிர்விலங்குகளில் சுருள் வடிவிலமைந்த ஓடு காணப்படும். ஓட்டின் கீழாக தசைப்பாகம் காணப்படும். ஒரு வகை (Pulmonata) நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. அதேவேளையில் இன்னொரு வகை (paraphyly) நத்தைகள் பூக்களினால் (செவுள்களினால்) சுவாசிக்கின்றன.ஆசியா, அமெரிக்கா, ஆஃப்ரிக்கா, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நத்தை ஒருவகை ஃபேன்ஸி உணவாகக் கருதி உட்கொள்ளப்பட்டு வருகிறது. இதை எஸ்கார்கோ எனவும் சிலர் குறிப்பிடுகிறார்கள். ரோமில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவிழாக்களின் போது திராட்சை ரசத்துடன் சேர்த்து நத்தையை உணவாகச் சாப்பிடும் வழக்கம் இருந்திருக்கிறது.  நத்தைகளை ஓவனில் அவித்து அதன் மீது பூண்டும், வெண்ணெயும் தடவி சாப்பிடுவது ரோமானியர் ஸ்பெஷல்.


Tags : Fancy Food Snail!
× RELATED 100 ஆண்டுகள் சேவையில் பஜாஜ்: சுதந்திரப்...