×

தேன்கனிக்கோட்டை அருகே அட்டகாசம்: ஊருக்குள் புகுந்த யானைகள் ராகி போர்களை துவம்சம் செய்தன

தேன்கனிக்கோட்டை:  தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த யானைகள், ராகி போர்களை துவம்சம் செய்ததால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் முகாமிட்டவாறு பல குழுக்காக பிரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன. பகல் முழுவதும் வனத்திற்குள் ஓய்வெடுக்கும் இந்த யானைகள் இரவு நேரத்தில் பல கி.மீ., தொலைவிற்கு இடம்பெயர்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அப்போது, உணவு தேவைக்காக ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை துவம்சம் செய்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் கடந்த 2மாதங்களாக 40க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு ராகி, நெல், சோளம், அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், கோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு லக்கச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்த 10 யானைகள் ராகி களங்களில் கதிரடிப்பதற்காக வைத்திருந்த போர்களை களைந்து மணிகளை தின்று நாசம் செய்துள்ளன. விடிய விடிய அட்டகாசம் செய்த யானைகள் பொழுது புலர்ந்ததும் அங்கிருந்து ஓட்டம் படித்தன. இதையடுத்து, நேற்று காலை களத்திற்கு சென்ற விவசாயிகள் ராகி போர்கள் அலங்கோலமாக கிடப்பதை கண்டு கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் லக்கச்சந்திரம் கிராமத்திற்கு விரைந்து சென்று யானைகளால் சேதப்படுத்தப்பட்ட ராகி போர்களை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது, யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

Tags : Attagasam ,Elephants ,Thenkanikottai ,town , Denkenikotta, elephants,
× RELATED முதுமலை முகாமில் குழந்தையை போல் உறங்கிய தாயை பிரிந்த குட்டி யானை