×

சிந்தாதிரிப்பேட்டையில் பரபரப்பு பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு : ‘போதை’ துப்புரவு தொழிலாளி கைது

சென்னை: சென்னை சிம்சன் சிக்னலில் உள்ள பெரியார் சிலை மீது போதையில் செருப்பு வீசிய துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.நடிகர் ரஜினி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பலவேறு அரசியல் கட்சிகள் ரஜினிக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும்,  மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து ரஜினிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியாரின் சிலையை நோக்கி மர்ம நபர் ஒருவர்  குடிபோதையில் ஒருமையில் பேசியபடி தனது செருப்பை எடுத்து வீசினார். இது அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்படி சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து பெரியார் சிலை மீது செருப்பு வீசிய நபரை பிடித்தனர். விசாரணையில் திருவல்லிக்கேணி, துவாரகா நகரை சேர்நத் துப்புரவு பணியாளர்  நரசிம்மலு (58) என தெரிந்தது. ரஜினி ரசிகரான இவர், குடிபோதையில் பெரியார் சிலை மீது செருப்பு வீசியது தெரிந்தது. இதை தொடர்ந்து நரசிம்மலு மீது சிலை அவமதிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : cleaning worker ,Periyar , Sindathiripettai, Sandalwood , Periyar statue, arrested
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல்...