×

அசத்தும் டாடா அல்ட்ராஸ்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அல்ட்ராஸ் (Altroz) காரை, கடந்த ஜனவரி 22ம்தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில், டாடா அல்ட்ராஸ் கார் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக ஸ்கோர் செய்துள்ளது. இவ்வகை, க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பெற்ற இரண்டாவது இந்திய கார் என்ற பெருமையை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. இதற்கு முன்பு, இதே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் கார், 5 ஸ்டார் அள்ளியிருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஆல்பா பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முதல் கார் அல்ட்ராஸ்தான் என்பதும் இதன் தனிச்சிறப்பு. அல்ட்ராஸ் காரின் புரொடெக்ஷன் வெர்ஷனை, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 89வது ஜெனீவா சர்வதேச மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன்பின்னர், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டாடா அல்ட்ராஸ் கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அத்துடன் 21 ஆயிரம் ரூபாய் என்ற முன்பணத்துடன் புக்கிங் துவங்கியது. இந்த சூழலில், டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் இந்திய மார்க்கெட்டில் முறைப்படி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த காரின் பெட்ரோல் வெர்ஷனின் எடை 1,036 கிலோ. டீசல் வெர்ஷனின் எடை 1150 கிலோ.இந்த காரில், 2 இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 இன்ஜின்களுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணக்கமானது. இந்த இரண்டு இன்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் கிடையாது. இந்த கார், XE, XM, XT, XZ மற்றும் XZ(O) என மொத்தம் 5 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஸ்போர்ட்டியான கிரில், எல்இடி டிஆர்எல் உடன் ட்யூயல்-சேம்பர் ஆட்டோமெட்டிக் புரொஜெக்டர் ஹெட்லேம்ப், ஸ்பிளிட் டெயில்லேம்ப்ஸ், பியானோ பிளாக் ஓஆர்விஎம் மற்றும் 16 இன்ச் லேசர் கட் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, 7 இன்ச் டிஎப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், மல்டி பங்ஷன் ஸ்டியரிங் வீல், புல் ஆட்டோமேட்டிக் ஏசி, குரூஸ் கண்ட்ரோல், புளூ ஆம்பியண்ட் லைட் மற்றும் 15 லிட்டர் கூல்டு கிளவ் பாக்ஸ் ஆகிய வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. டியூயல் பிரண்ட் ஏர்பேக், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் சிஎஸ்சி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஐசோபிக்ஸ், ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் போன்ற ஸ்டாண்டர்டு பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.இப்புதிய கார், மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ₹5.29 லட்சம். டாப் வேரியண்ட்டின் விலை ₹9.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : Astana Tata Ultras ,Astana , Astana Tata Ultras
× RELATED ஊழல் புகாருக்கு ஆளான ராகேஷ்...