×

ஆஸ்திரேலிய ஓபன் சோபியா சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்பினி முகுருசாவுடன் (26 வயது, 32வது ரேங்க்) நேற்று மோதிய சோபியா கெனின் (21 வயது, 15வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர், முகுருசாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்தார்.

2வது மற்றும் 3வது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சோபியா 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இது அவர் வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இப்போட்டி 2 மணி, 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிறந்த சோபியா அமெரிக்காவில் குடியேறி, புளோரிடா மாகாணம் பெம்புரோக் பைன்ஸ் நகரில் வசித்து வருகிறார். அதே போல, வெனிசுவேலா தலைநகர் கராகஸில் பிறந்த முகுருசா சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்தாலும், ஸ்பெயின் வீராங்கனையாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Australian Open Sofia Champion ,Australian Open , Australian, Open, Sofia, Champion
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர்...