×

பார்வையற்ற மாணவி பலாத்காரம்: ஆசிரியருக்கு 60 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் பார்வையில்லாத 6ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோட்டில் கண் பார்வை இல்லாதவர்களுக்கான அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பார்வையில்லாத மாணவி 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 6ம் வகுப்பு படிக்கும்போது அதே பள்ளியைச் சேர்ந்த ஓர் ஆசிரியர் வகுப்பறையில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சக மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினார். இதில் மாணவியை ஆசிரியர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளி முதல்வர் 2017ம் ஆண்டு கோழிக்கோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார், ஆசிரியர்  மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோழிக்கோடு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திராம்மா, ஆசிரியருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிபதி கூறுகையில், சமீபகாலமாக மாணவிகளை ஆசிரியர்கள் பலாத்காரம் செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடுமையான தண்டனை மூலமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும். பாதிக்கப்பட்ட மாணவியின்  குடும்பத்திற்கு அரசு 2 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். இதை மாணவியின் பெயரில் நிரந்தர முதலீடு செய்து அதற்கான வட்டியை மாணவி படிப்பு செலவிற்கு பயன்படுத்தவேண்டும் என்றார்.

Tags : teacher ,prison ,student rape ,Blind , Blind student, rapist, teacher, 60 years, prison, Pokோmon court
× RELATED உதவி பேராசிரியர்...