×

கரீபியனில் நிலநடுக்கம்

மியாமி: கரீபியன் கடல் பகுதியில் ஜமைக்கா - கியூபா தீவுகளுக்கு இடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதன் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு ெவளியேறி சாலைகளில் திரண்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனிடையே முன்னெச்சரிக்ைக நடவடிக்கையாக கட்டிடங்களில் இருந்து பொதுமக்களை போலீசார் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். ஜமைக்காவில் உள்ள லூசியாவின் வடமேற்கே 125 கி.மீ. தொலைவை மையமாக கொண்டு 10 கிமீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த உடனடி தகவல் கிடைக்கவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுத்து,பின் திரும்ப பெறப்பட்டது.



Tags : Earthquake ,Caribbean , Earthquake,Caribbean
× RELATED மியான்மரில் மிதமான நிலநடுக்கம்