பீகார் தலைநகர் பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மீது போலீசார் தாக்குதல்..: 4 பேர் காயம்

பாட்னா: பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜீல் இமாம், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். ‘குடியுரிமை சட்டத்தால் இந்தியாவிலிருந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை துண்டிப்போம்; அது நம் கடமை’ என அவர் பேசுவது போன்ற வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனால் மாணவர் ஷார்ஜீல் இமாம் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அசாம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் தலைமறைவான சர்ஜில் இமாம்யை போலீசார் தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.

தேச விரோத வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் சர்ஜில் இமாம் பாட்னாவில் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லிக்கு கொண்டு செல்ல ஜெகனாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து அவர்  விமானம் மூலம், போலீசார் அழைத்துச் சென்றனர். இதுகுறித்த செய்தி சேகரிப்பதற்காக பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர். அப்போது செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்த போலீசார் அவர்களை தள்ளிவிட்டனர். இதில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Related Stories:

>