அவசரநிலை பிரகடனம் போன்று சிஏஏ.க்கு தொடர்ந்து எதிர்ப்பு: சீதாராம் யெச்சூரி டிவிட்

புதுடெல்லி: ‘அவசரநிலை பிரகடனத்தைப் போலவே, குடியுரிமை திருத்த சட்டமும் தொடர்ந்து எதிர்ப்புக்குள்ளாகும்,’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.   குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: குடியுரிமை திருத்த சட்டம்  (சிஏஏ) நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று அமல்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அதை எதிர்த்து வீதிகளில் போராட்டம் நடத்தப்படும். அவசர நிலை பிரகடனம் எனப்படும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது இதேபோன்று எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. அதேபோல், போராடி ஜனநாயகத்தை மீட்போம். எனவே, மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு, தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும்.

அண்டை நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி அகதிகளாக வந்தவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பாதுகாக்க வேண்டும். உடை, உணவு, பாலினம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியர்களை பிரிக்க பாஜ.வும் ஆர்எஸ்எஸ்.சும் முயற்சிக்கின்றன. ேதர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி திரட்டும் திட்டம் இந்த அரசின் மிகப்பெரிய ஊழல். கட்சிகளுக்கு  நிதி அளித்தவர்கள் பட்டியலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: