வங்கதேச பெண்ணை 5 நாள் சிறை வைத்து கூட்டு பலாத்காரம்: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

பெங்களூரு: வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து வங்கதேச பெண்ணை 5 நாட்கள் சிறை வைத்து கூட்டு  பலாத்காரம் செய்த காமுகர்கள் 5 பேரை எலகங்கா போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஆஷா  (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர், வீட்டில் இரண்டாவது பெண் குழந்தை. தந்தை கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. இதனால் வேலைக்கு செல்ல திட்டமிட்டார். வங்கதேசத்தை சேர்ந்த உறவினர் ஒருவரிடம் வேலை வாங்கி தருமாறு கூறினார். அவர் பெங்களூருவில் எனக்கு தெரிந்த பெண் இருக்கிறார். அவர் மூலம் வேலை தேடி கொள் என்று கூறி பெங்களூரு முகவரியை கொடுத்தனுப்பினார்.

வங்கதேச எல்லையை கடந்து ரயில் மற்றும் பஸ் மூலம் பெங்களூரு வந்த ஆஷா, உறவினர் கூறிய பெண்ணை சந்தித்தார். அவர் ஆஷாவை வரவேற்று வீட்டில் தங்க வைத்தார். பின்னர் கவுரவமான வேலை வாங்கி தருவதாக கூறி, தனியார் குடியிருப்பிற்கு அழைத்து சென்றார். அங்கு வாலிபர் ஒருவர் தங்கியிருந்த அறைக்கு ஆஷாவை அந்த பெண் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். ஆஷாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட வாலிபர் எனது வீட்டிலேயே தங்கி கொள், அதிக  வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதை நம்பிய ஆஷா அவரது வீட்டில் தங்கினார். அன்றைய தினம் இரவு ஆஷாவை வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தனது நண்பர்கள் 4 பேரை வரவழைத்து, பலாத்காரம் செய்யும்படி கூறினார். அவர்களும் ஆஷாவை பலாத்காரம் செய்துள்ளனார். தொடர்ந்து 5 நாட்கள் இந்த கொடூர செயலில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, அங்கிருந்து தப்பியோடி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து காமுகர்கள் 5 பேர் மற்றும் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய பெண்ணையும் தேடி வருகின்றனர்.

Related Stories:

>