×

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

சாத்தூர்:  இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்களின் காணிக்கையாக ரூ.34 லட்சம் கிடைத்தது.தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதம் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம்.  அதனை தொடர்ந்து நேற்று ஒரு கால்நடை உண்டியல். ஒரு அன்னதான உண்டியல் மற்றும் 10 நிரந்தர உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கிடப்பட்டன. அதில் ரொக்கமாக 34 லட்சத்தி 77 ஆயிரத்தி 585 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கையை கோயிலின் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் தங்கம் 85 கிராம் 300  மில்லி, வெள்ளி 319 கிராம் 300 மில்லி கிடைத்தது.

பணம் எண்ணிக்கையில் சாத்தூர், துலுக்கப்பட்டி  ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும்  ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் கோயில்  ஆணையர் கணேசன், இருக்கன்குடி கோயில் ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Tags : Opening ,Undial ,Mariamman Temple ,Arangankudi ,Temple ,Ianankudi Mariamman Undial Opening , Ianankudi ,Mariamman, Undial, temple
× RELATED கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் தேர் பவனி கோலாகலம்