×

குலசேகரம், மார்த்தாண்டம் அருகே சாலையின் குறுக்கே சாய்ந்த மரங்கள்: போக்குவரத்து பாதிப்பு

குலசேகரம்: குலசேகரத்தை அடுத்துள்ள மங்கலம் பகுதியில் ஆரல்வாய்மொழி – நெடுமங்காடு சாலையோரம் பழமையான மாமரம் ஒன்று நின்றது. சாலை விரிவாக்கப்பணி, குடிநீர் குழாய் பதித்தல் போன்றவற்றுக்காக அடிக்கடி சாலையோர பகுதிகள் தோண்டப்பட்டு வந்ததால் இதன் அடிபகுதி பலமிழந்து காணப்பட்டது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அன்று நள்ளிரவு திடீரென மரம் சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து 4 கம்பங்கள் சேதமடைந்தன. நேற்று மதியம் மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் நேற்று மதியம் வரை குலசேகரம் பொன்மனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மார்த்தாண்டம்:  இதுபோல் நேற்று மாலை மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் குறும்பேற்றி அம்மன் கோயில் அருகே நின்ற பழமையான புளியமரம் வேரோடு   சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதில் அவ்வழியாக சென்ற மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. அப்போது வாகனங்கள் செல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் வந்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்….

The post குலசேகரம், மார்த்தாண்டம் அருகே சாலையின் குறுக்கே சாய்ந்த மரங்கள்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Marthandam ,Mangalam ,Aralvaimozhi – ,Nedumangadu road ,Dinakaran ,
× RELATED குலசேகரம் எஸ்ஆர்கே பள்ளியில் நீட்...