×

புழல் சிறை காவலர் குடியிருப்பில் மறைந்து வரும் விழிப்புணர்வு ஓவியங்கள் : புதர்மண்டி கிடக்கும் அவலம்

புழல்: புழல் ஜிஎன்டி சாலை மற்றும் அம்பத்தூர் சாலை ஆகியவை இணையும் பகுதியில் புழல் சிறைச்சாலை அதிகாரிகள் குடியிருப்புகள், புழல் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த குடியிருப்பின் சுற்றுச் சுவர்களில் சினிமா, அரசியல் பொது நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு விளம்பர போஸ்டர்கள், குறிப்பாக ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக இருந்தது.  இதை அறிந்த அப்போதைய சென்னை சரக சிறைத்துறை தலைவர் ராஜேந்திரன் தீவிர முயற்சி எடுத்து, சிறைச்சாலையில் உள்ள தண்டனை கைதிகளை கொண்டு அந்த சுவரை சுத்தம் செய்து, வெள்ளையடித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விதவிதமான படங்களுடன் கருத்துக்களை கொண்ட ஓவியங்கள் வரைய செய்தார்.  

இதற்கு பின்னர் புழல் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜ் இந்த விழிப்புணர்வு குறித்த விவரங்களை மேலும் அழகுபடுத்தினார். தற்போது, இந்த சுற்றுச்சுவரில் கொடிகள் படர்ந்தும், அருகே முட்செடிகள் வளர்ந்தும் உள்ளதால் விழிப்புணர்வு வாசகங்கள் தெரியாமலும், அழிந்து வரும் நிலையிலும் உள்ளது. எனவே இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் புழல் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அழிந்து வரும் விழிப்புணர்வு குறித்த படங்கள் மற்றும் கருத்துக்களை கொண்ட ஓவியங்களை புத்துப்பிக்கவும், முட்செடிகளை அகற்றவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Pussy Prison, Guard Quarters, Portraits
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...