×

ரிலையன்ஸ் பிரெஷ் கடைகளில் முழு பைசா வசூல் விற்பனை: நாளை கடைசி

சென்னை: நாடு முழுவதும் உள்ள அனைத்து ரிலையன்ஸ் பிரெஷ் கடைகளிலும் நாளை (26ம் தேதி) வரை முழு பைசா வசூல் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மெகா விற்பனை மூலம் வாடிக்கையாளர்கள் மளிகை, பழங்கள், காய்கறிகள், சமையலறை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை சிறந்த சலுகை விலையில் பெறலாம்.  இதுகுறித்து ரிலையன்ஸ் பிரெஷ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தாமோதர் மால் கூறுகையில், ‘‘எங்களை போன்ற பல்பொருள் அங்காடி பிராண்டுகள், நுகர்வோரின் சுற்றுப்புறத்தில் பல ஆண்டுகளாக இருப்பதால்  அவர்களின் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். வாடிக்கையாளர்களுடைய மகிழ்ச்சியின் கொண்டாட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை தொடும் திருவிழாக்கள் போன்ற சந்தர்ப்பங்கள் மூலம் அவர்களுடன் பேசுவதற்கும் இணைவதற்கும் ஒரு வாய்ப்பை இந்த சலுகை விற்பனை திட்டம் வழங்குகிறது’’ என்றார்.


Tags : Reliance Fresh Stores , Reliance Fresh Stores
× RELATED கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க...