×

அணிவகுப்பு ஒத்திகை போக்குவரத்து பாதிப்பு

புதுடெல்லி: நாட்டின் 71வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முழு அளவிலான அணிவகுப்பு ஒத்திகை, டெல்லி ராஜபாதையில் நேற்று நடந்தது. இதற்காக, தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டன. இதனால், வழக்கமாக அந்த வழிகளில் பயணிப்போர் கடும் அவதிக்குள்ளாகினர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர்கள் தாங்கள் போய் சேர வேண்டிய இடத்துக்கு தாமதமாக சென்று சேர்ந்தனர். டெல்லியின் தவுலா குவான், பிகாஜி காமா, பிரகதி மைதான் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags : Parade, rehearsal, traffic, impact
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...