×

தனுஷ்கோடி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1150 கிலோ மஞ்சள் பறிமுதல்

ராமேஸ்வரம்: இந்திய கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் மாலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஹோவர் கிராப்ட் கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடலில் அமைந்துள்ள மூன்றாம் மணல் திட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதினைந்து மஞ்சள் மூட்டைகளை கைப்பற்றினர். தலா 50 கிலோ வீதம் 15 மூட்டைகளில் இருந்த 750 கிலோ சமையல் மஞ்சளும் மண்டபத்திலுள்ள கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. இரவில் படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக மஞ்சள் மூட்டைகளை மணல் திட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்பதால் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சமீப காலமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வேதாளை, மண்டபம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடற்கரையிலிருந்து மஞ்சள் மூட்டைகள் படகில் இலங்கைக்கு கடத்தி செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலுக்குள் உள்ள மூன்றாம் மணல் திட்டில் மஞ்சள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டதால் இது குறித்து புலனாய்வு துறையினரும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நாட்டு படகில் இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ மஞ்சளை க்யூ பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். படகை பறிமுதல் செய்து யாருடையது என க்யூ பிரிவு மற்றும் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post தனுஷ்கோடி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1150 கிலோ மஞ்சள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Dhushkodi ,Rameswaram ,Indian Coast Guard ,Dhanushkodi Sea ,Dandushkodi ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு