×

கேங்மேன் பணி நியமன முறைகேடு சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: மின்துறை கேங்மேன் பணிக்கான நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ராஜா ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது.

இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரை சில தொழிற்சங்கங்கள் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கேங்மேன் பதவிக்கு இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 80 சதவீதம் பேர் தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.எனவே, கேங்மேன் பணிக்காக ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால் தொடர்புடைய மின்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.தினேஷ், முகமது ஹபிபுல்லா ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலாளர்கள் தொடர்பான விவகாரம் என்பதால் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் முறையிட மனுதாரருக்கு அறிவுறுத்தினார்.

Tags : investigation ,Gangman ,CBI , Gangman Work, Abuse, CBI, Investigation, Icort, Case
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...