×

தமிழறிஞர்கள் 7 பேரின் நூல்கள் நாட்டுடமை

சென்னை:  தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், அண்ணா, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், திரு.வி.க. உள்ளிட்ட 149 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு 11.17 கோடி பரிவுத்தொகையாக அவர்களின் மரபுரிமையர்களுக்கு வழங்கப்பட்டுள் ளது. இதனைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் 20.07.2019 அன்று சட்டமன்றப் பேரவையில் உளுந்தூர் பேட்டை சண்முகம், கவிஞர் நா.காமராசு, முனைவர் இரா.இளவரசு, தமிழறிஞர் அடிகளாசிரியர், புலவர் இறைக்குருவனார், பண்டித ம.கோபால கிருட்டினன்,  பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர்தம் குடும்பத்தினருக்கு பரிவுத்தொகையாக தலா 5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் வழங்கினார்.  அதன்படி, தமிழ்நாடு அரசால் இதுவரை 156 பேரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது.

Tags : writers ,Tamil , Tamil scholars, texts nationalization
× RELATED புத்தகம் படித்து கதை சொல்லும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்