×

முத்துப்பேட்டையில் மாட்டு பொங்கலையொட்டி மட்டன், சிக்கன், மீன் விற்பனை களைகட்டியது

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் நேற்று மாட்டுப்பொங்கல் நாளில் மட்டன், மீன் மற்றும் கோழிக்கறி கடைகளில் வியாபாரம் களைகட்டியது.  மாமிச கடைகளில் கூட்டம் நிரம்பு வலிந்ததால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பொங்கல் பண்டிகை விழாவில் மாட்டுப்பொங்கலன்று  டெல்டா பகுதியில் அனைத்து வீடுகளில் மாமிசம் களைகட்டும். அவர் அவருக்கு பிடித்த மாமிச வகைகளை வாங்கி ருசியாக சமைத்து படையலிட்டு  குடும்பத்துடன் கூடி உண்டு மகிழ்வார்கள். இது ஆண்டாண்டு காலம் தொடர்ந்து வருகிறது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில்  ஆசாத் நகர் பெரியகடைத்தெரு, சித்தேரிக்குளகரை, பேட்டை மற்றும் மன்னை சாலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஏராளமான  ஆட்டு இறைச்சிகடை, கோழி கடைகள், மீன் விற்பனை கடைகள் உள்ளன. நேற்று மாட்டு பொங்கலை முன்னிட்டு இந்த அனைத்து கடைகளிலும்  வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

இந்நிலையில், மாட்டுபொங்கல் நாளில் கொண்டாடப்பட வேண்டிய ஆடுகள் கடைகளில் நேற்று உயிரற்று தொங்கவிடபட்டிருந்தன. அவற்றை  ஆராதிக்க வேண்டிய விவசாயிகள் உட்பட வாடிக்கையாளர்கள் பலரும் கடைவாசலில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து ஆட்டு  இறைச்சி, மீன் மற்றும் கோழிக்கறிகளை வாங்கி கொண்டு வீடு திரும்பினர். இதில் ஆசாத்நகர் பகுதியில் உள்ள மீன் மார்கெட்டில் சாலை இருபுறமும்  இருந்த மீன் கடைகள் மற்றும் ஆட்டு இறைச்சிகடை, கோழி கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நேற்று அதிகளவில் அலைமோதியது. இதனால்  கடலில் பிரஷாக கொண்டு வரப்பட்ட மீன்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வேதாரண்யம், நாகப்பட்டினம், மல்லிப்பட்டினம்  ஆகிய பகுதிகளிருந்தும் டன் கணக்கில் மீன் வகைகள் விற்பனைக்கு ஆங்காங்கே குவிக்கப்பட்டு இருந்தது. இதில் குறிப்பாக சாதாரண நாட்களின்  கிலோ ரூ.300 முதல் விற்பனை செய்யப்பட்ட இறால் நேற்று ஒருகிலோ 400ரூபாயிக்கு மேல் விலைப்போனது. அதேபோல் பல்வேறு முக்கிய ரக  மீன்களும் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது.

இப்பகுதியில் மீன்களின் விலை உயர்வான மீனாக கருதப்படும் கொடுவா மீன் கிலோ 600வரை விற்கப்பட்டாலும் அந்த மீன்களை வாங்க மக்கள்  குவிந்த கூட்டத்தில் பட்ட சிரம்மம் அதிகம்.அதேபோல் அருகேயிருந்த ஆசாத்நகர் படகு இறங்குதளத்திலிந்தும் கடலில் பிடித்து வரப்பட்ட மீன்கள்  பாலத்தின் அடியில் ஆற்றின் கரையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதால் அதனை வாங்கவும் ஏலம் எடுக்க ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்.  மேலும் முத்துப்பேட்டை சுற்றுப் பகுதியில் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் கூட்டமும் அங்கு பெருமளவில் காணப்பட்டது.  இந்தநிலையில் இங்கு வந்தவர்களின் கார், பைக், சைக்கிள் போன்ற வாகனங்களும் பல மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால்  அப்பகுதியை கடந்து செல்லமுடியாமல் வாகனங்கள் திணறின. இதனையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான  போலீசார் குவிக்கப்பட்டு பாதுக்காப்பு பனி மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



Tags : Muthupettai, Beef, Mattan, Chicken, Fish, Sale
× RELATED குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்...