×

வத்தல்மலை பகுதியில் கனமழையால் நிரம்பி வழியும் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரி: தர்மபுரி வத்தல்மலை பகுதியில் கனமழை பெய்ததால், அடிவாரத்தில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி அருகே வத்தல்மலை, கடல்மட்டத்தில் இருந்து 6கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர், அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் தேங்குகிறது. தேங்கும் நீரை வைத்து அங்குள்ள விவசாய நிலங்களில் நெல், மஞ்சள், கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். கடந்த 3 மாதத்திற்கு முன், வத்தல்மலை பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அடிவாரத்தில் உள்ள தடுப்பணை நிரம்பியது. உபரிநீர் அங்குள்ள ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த மலையில், வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணை நிரம்பியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வத்தல்மலையில் பெய்யக்கூடிய மழைநீர் காட்டாறு மூலம் அடிவாரத்தில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. இந்த தடுப்பணையில் மழைநீர் தேங்குவதால், விவசாய பணிகள் மும்முரமாக நடக்கிறது. தடுப்பணை நிரம்பியுள்ளதால், உபரிநீர் ஏரிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது,’ என்றனர்….

The post வத்தல்மலை பகுதியில் கனமழையால் நிரம்பி வழியும் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Wattalmalai ,Dharmapuri ,Dharmapuri Vatthalmalai ,Vathalmalai ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...