×

தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் ; நெல்லையப்பர், சங்கரன்கோவில் கோயில்களுக்கு சான்றிதழ்

நெல்லை: நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையில் பிரசாதங்கள் செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி முதல் இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளது. முதல் இடத்தை நெல்லையப்பர் கோயிலும், இரண்டாம் இடத்தை சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலும் பெற்றுள்ளது. நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது.

இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சன்னதிகள் உள்ளன. நெல்லையப்பர் கோயிலுக்குள் பொற்றாமரைக் குளமும், நடுவில் நீராழி மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் 96 தூண்கள் உடைய ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், நவகிரக மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகிய மண்டபங்களில் அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

நாட்டிலேயே மூன்றாவது பெரிய திருத்தேர் நெல்லையப்பர் திருத்தேர். அரியநாத முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட ரதவீதிகளில் 1505-ல் முதல்முறையாக தேர் வெள்ளோட்டம் விடப்பட்டு, இன்றுவரை மனித சக்திகள் கொண்டே தேர் இழுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலை தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய சான்றிதழ் வழங்கியுள்ளது. இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனையடுத்து அந்த கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags : temples ,Sankarankoil ,Tamil Nadu ,Nellaiappar ,temple , Healthy offerings, Nelliappar temple, Sankarankoil temple,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு