×

அரவக்குறிச்சி அருகே களைகட்டியது சேவல் சண்டை

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் நடைபெறும் சேவல்கட்டு (சண்டை) பிரசித்தி பெற்றது. சேவல்களில் வல்லுறு, நூலான், கீரி, மயில் என்று பல்வேறு வகைகள் உண்டு. 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சேவல் கட்டு இப்பகுதி மக்களின் கலாசாரத்துடன் ஒன்றிய வீர விளையாட்டாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று ஆரம்பித்து 4 நாட்கள் சேவல் கட்டு நடைபெறும். அதன்படி நேற்றுமுன்தினம் முதல் சேவல் கட்டு நடந்து வருகிறது. இதில் கரூர் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சேவல் கட்டு பிரியர்கள் ஏராளமான சேவலுடன் வந்து கலந்து கொண்டனர்.

நேற்றுமுன்தினம் மட்டும் 10,000 சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டன. 2வது நாளான நேற்றும் 10 ஆயிரம் சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டன. பூலாம்வலசு கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் ஆங்காங்கே குழுகுழுவாக போட்டிகள் நடந்தது. போட்டியில், சேவல்களின் கால்களில் தடையை மீறி கத்தியை கட்டி  மோத விட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். சேவல்களின் கால்களில் கட்டப்பட்ட கத்தி குத்தியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Tags : cock fight ,Arawakurichi , Arakurichi, weed, cock fight
× RELATED அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பசு, எருமையை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய்