×

நிர்பயா கொலைக் குற்றவாளி முகேஷ் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் புதிய சீராய்வு மனுத் தாக்கல்

டெல்லி: நிர்பயா கொலைக் குற்றவாளி முகேஷ் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் புதிய சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகள் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்வதால் ஜனவரி 22-ல் தூக்கிலிடுவது தாமதமாகி வருவதாக சட்டநிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நிர்பயா குற்றவாளி முகேஷின் கருணை மனுவை துணை நிலை ஆளுநர் நிராகரித்துள்ளார். முகேஷின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனுப்பி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார்  கைது செய்தனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின்  தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. இந்த நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி ஐகோர்ட்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Mukesh ,Delhi ,court ,murder convict , Nirbhaya murder,convict Mukesh files, fresh restraining ,delhi court
× RELATED சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர்...