×

போட்டியில் வென்றவர்கள் முதல்வரிடம் வாழ்த்து

சென்னை: உத்தரபிரதேசத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இரண்டாவது தேசிய தீயணைப்பு விளையாட்டுகள் மற்றும் தீயணைப்பு சேவை விளையாட்டு போட்டிகள் உத்திரபிரதேச மாநிலம், லக்னோவில் டிசம்பர் 20 முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள், ஓட்டப்பந்தயத்தில் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 15 தங்கம், 18 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களை வென்றார்கள். பதக்கங்களை வென்ற 33 தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தலைமை செயலகத்தில் நேற்று பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.


Tags : contest winners , Competition, winners, firsts, congratulations
× RELATED கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக...