×

ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி விழா தங்க குதிரை வாகனத்தில் இருந்து பெருமாள் சாய்ந்ததால் பரபரப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் திருமங்கை மன்னன் வேடுபறி விழாவில் தங்க குதிரை வாகனத்தில் இருந்து பெருமாள் கீழே சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 26ம் தேதி  துவங்கியது. 27ம் தேதி பகல் பத்து முதல் திருநாள் துவங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வந்த உற்சவர் நம்பெருமாள் ஜனவரி 5ம் தேதி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 6ம் தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ராப்பத்து 8ம் நாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி விழா நடந்தது.

நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடானார். வையாளி கண்டருள மணல் வெளியில் பெருமாளை தூக்கிக்கொண்டு சாமி தூக்குபவர்கள் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடுவது வழக்கம். நேற்று இதுபோல் ஓடியாடியபோது சாமி தூக்கி செல்பவர்களில் ஒருவரது கால் இடறி தடுமாறி உட்கார்ந்துவிட்டார். அவர் மேல் விழுந்துவிடக்கூடாது என மற்றவர்கள் பேலன்ஸ் செய்ய முயன்றனர். அப்போது தங்க குதிரை வாகனத்தின் வலதுபுறம் இருந்த மூங்கில் கம்பம் முறிந்து சேதமானது.

முறிந்த கம்பத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதில் இடதுபுறமிருந்த மூங்கில் கம்பமும் முறிந்துவிட்டது. இதனால் பெருமாள் கீழே சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சாமி தூக்குபவர்கள் பெருமாளை கீழே விழாமல் பத்திரமாக தாங்கிப்பிடித்தனர். இதனால் பக்தர்கள் ரங்கா, ரங்கா என பலத்த கோஷமிட்டு கதறினர். பெருமாள் கீழே சரிந்ததால் சிறிய வெள்ளி பல்லக்கில் பெருமாளை தூக்கி சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் பரிகார பூஜைகளை பட்டர்கள் செய்தனர். அதன் பின் விழா தொடர்ந்து நடைபெற்றது.

Tags : king ,Thirumangai ,funeral ceremony ,Srirangam Srirangam , Srirangam, Thirumangai King, Vedupuri Festival, Gold Horse, Perumal, Parabaram
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்