×

ஏஎஸ்பி கிளாசிக் செரீனா அசத்தல்

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சக வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் மோதிய செரீனா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனாவுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் கைப்பற்றிய முதல் சாம்பியன் பட்டமாக இது அமைந்தது. மகள் ஒலிம்பியாவுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் செரீனா.

* வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா, மகளிர் அணி வீராங்கனை பூனம் யாதவ் இருவரும் பிசிசிஐ சார்பில் பெருமை மிகு பாலி உம்ரிகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ காந்த், அஞ்சும் சோப்ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. புஜாரா, மந்தனா, ஜுலன் கோஸ்வாமி, மயாங்க் அகர்வால், ஷபாலி வர்மா, ஷிவம் துபே, நிதிஷ் ராணா, மிலிந்த் குமார், அஷுதோஷ் அமன் ஆகியோரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
* முன்னாள் நட்சத்திரங்கள் கவுதம் கம்பீர், மதன் லால் இருவரையும் கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
* ஐதராபாத் எப்சி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆல்பர்ட் ரோகா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் பெங்களூரு எப்சி அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.


Tags : Assault ,ASP Classic Serena , ASP, Classic, Serena, Wonderful
× RELATED கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை...