துபாயில் பலத்த மழை காரணமாக விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: துபாயில் பலத்த மழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை சென்னை வரவேண்டிய 5 விமானங்கள் 3 மணி நேரம் தாமதமாக வந்தன. இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் செல்லும் விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. ஆனால், இதுகுறித்து பயணிகளுக்கு முறையான அறிவிப்பு இல்லை.

மேலும், விமானங்கள் வருகை, புறப்பாடு பற்றி தகவல் தெரிவிக்கும் டிஜிட்டல் பலகைகளிலும் எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் பயணிகள் பெரும் குழப்பமடைந்தனர். சென்னையில் இருந்து காலை 5.15 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும், பிற்பகல் 2.15 மணிக்கு இயக்கப்படும் விமானமும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Flights ,Dubai Switzerland ,Dubai , Dubai, heavy rains, flights, delays, travelers, avadi
× RELATED சீனாவில் பரவியுள்ள கொரோனா தாக்குதல்...