×

சிறுவள்ளூர் பகுதியில் காவல் உதவி மையம் திறப்பு

பெரம்பூர்: செம்பியம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயின், செல்போன் பறிப்பு சம்பவம் அடிக்கடி நடப்பதாக மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெரம்பூர் ரயில் நிலையம், லோகோ ரயில் நிலையம் மற்றும் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் ஆகிய 3 ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையான சிறுவள்ளூர் சாலையில் காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்தரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுவள்ளூர் சாலையில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமராவுடன் 24 மணி நேரமும் காவலர்கள் பணியாற்றும் வகையில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த 11ம் தேதி நடந்தது. செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்தர் மையத்தை திறந்து வைத்தார். இதில், செம்பியம் இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், பரணிக்குமார், திருவிக நகர் இன்ஸ்பெக்டர் சண்முகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Opening ,Cheruvallur Cheruvallur ,Police Assistance Center ,Police Assistance Center of Opening , Cheruvallur Area, Police Assistance Center, Opening
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு