×

டெல்லி தேர்தலுக்காக பாஜ.வில் 15 பேர் குழு

புதுடெல்லி: டெல்லியில் வருகிற பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜ தேர்தல் கமிட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி பாஜ தலைவர் மனோஜ் திவாரி உட்பட 15 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், டெல்லி பாஜ எம்பி.க்கள், டெல்லி முன்னாள் பாஜ தலைவர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாத கடைசியில் தேர்தல் மேலாண்மை கமிட்டி தேர்தல் தொடர்பாக பணிகளுக்காக 35 பாஜ குழுக்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : BJP ,Delhi ,Fifteen , BJP ,Delhi polls
× RELATED டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத்...