×

அரக்கோணம் சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் அமோக விற்பனை: கட்டுப்படுத்த முடியாத அளவு பெருகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெருகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரக்கோணத்தை ஒட்டியுள்ள பாணாவரம், காவிரிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஒளிவு மறைவு இல்லாமல் பாக்கெட்டுகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. சாராயத்தை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து, அளவிற்கு ஏற்றாற்போல் 50 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர். குறைந்த விலையில் கிடைப்பதால் கூலித்தொழிலாளர்கள் பலரும் இதற்கு வாடிக்கையாளர்களாக  உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கள்ளச்சாராயமானது வயலில் உள்ள ஏரிகள் மற்றும்  குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து காய்ச்சி சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.  

இதனால் அவை குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மார்க்கானது 12 மணியளவில் திறக்கப்படுவதால், மது அருந்தும் மக்கள் காலை 6 மணிமுதல் இங்கு வந்து மது அருந்துகின்றனர். இதனால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் மேலும், அவர்களது குடும்பங்களும்  பாதிக்கப்படும். இந்த கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை தடுப்பது மட்டுமின்றி, இதன் மொத்த வியாபாரிகளையும் கைது செய்ய வேண்டுமென்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.

Tags : activists ,Arakkonam ,neighborhood , Arcane, counterfeit, sales, social activists, indictment
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...