×

தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் 82 டன் பிளாஸ்டிக் பறிமுதல்: கடைக்காரர்களிடம் 17.12 லட்சம் அபராதம்

சென்னை: ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் இதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டும், பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.அதன்படி, தேனாம்பேட்டை மண்டலம், 109 முதல் 126 வரையுள்ள வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு அலுவலர்கள் ஆகியோர் இணைந்து 3 தனிக்குழுக்கள் அமைத்து, 2019ம் ஆண்டு 1ம் தேதி முதல் 2020ம் ஆண்டு 8ம் தேதி வரை 28,049 வணிக நிறுவனங்கள், கடைகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்களை பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ₹6,44,700 அபராதம் விதிக்கப்பட்டு, 21 டன் வரையிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதேபோல், கோடம்பாக்கம் மண்டலத்தில் 127 முதல் 142 வரையுள்ள வார்டு பகுதிகளில் 40,392 வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ₹10,67,000 அபராதம் விதிக்கப்பட்டு, 61 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Tags : Shoppers ,Kodambakkam 82 ,Kodambakkam Thenambate , Thenambate, Kodambakkam, plastic,
× RELATED உ.பி.யில் வாடிக்கையாளர்களை அழைப்பதில்...