×

ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பாகன் யானை என்ன இந்திய குடிமகனா? : உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: சிறைப் பிடிக்கப்பட்ட யானையை விடுவிக்கக் கோரி பாகன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யானை என்ன இந்திய குடிமகனா? என கேள்வி எழுப்பியது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் யானை ஒன்று மாயமானது. அதை மீட்டுத் தரக்கோரி நாடு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அடுத்த 2 மாதங்களில் யமுனா புஷ்தா பகுதியில் டெல்லி வனத்துறையினர் அந்த யானையையும், அதன் பாகனையும் கண்டுபிடித்து மீட்டனர். ஆனால், வனத்துறையினர் யானையை சிறைப் பிடித்து அடைத்து வைத்தனர்.

இந்நிலையில், சட்ட விரோதமாக பிடித்து வைத்துள்ள தனது யானை லட்சுமியை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் யானைப் பாகன் சதாம் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது 47 வயது யானை லட்சுமியை விடுவிக்கும்படி கோரப்பட்டிருந்தது. அந்த மனு தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், யானை என்ன இந்திய குடிமகனா?  என கேள்வி எழுப்பி அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.

Tags : citizen ,Indian ,Supreme Court , Indian citizen, elephant, petition?
× RELATED ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது...