×

மதுரையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை ஒழுங்கமைக்க குழு அமைக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர் திருநாளான தை பொங்கல் முதல் நாளன்று தமிழகத்தில் மதுரை மாவட்டம், அவனியாபுரம் அதனை தொடர்ந்து பாலமேடு மற்றும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களை பாதுகாக்கக்கோரி மதுரையை சேர்ந்த திருப்பதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வில் முக்கியமான இடம் என்பது ஜல்லிக்கட்டு மாடுகளை பதிவு செய்யும் இடம், மாடுகளை பரிசோதனை செய்யும் இடம் மற்றும் வாடிவாசல் உள்ளிட்டவையாகும். இந்த இடங்களில் உயர்நீதிமன்றம் ஒரு குழு அமைத்து உத்தரவிட வேண்டும். இந்த குழு என்பது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முறையாக வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடுவதை கண்காணிக்க வேண்டும்.

ஏனெனில் காளைகளை முறையாக பரிசோதனை செய்யாமல் ஆங்காங்கே புதிதாக வரக்கூடிய மாடுகளை உள்ளே நுழைப்பதால் மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு காளைகளோடு மற்ற காளைகள் மோதி கொள்வதால் காளைகளுக்கும் காயம் ஏற்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த வருடம் நாங்கள் மனுதாக்கல் செய்திருந்தோம். இது சம்மந்தமாக உயர்நீதிமன்றமும் உரிய உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அந்த உத்தரவு அவனியாபுரத்தில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டிருந்தது. பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையாக கடைபிடிக்கவில்லை. எனவே இந்த 3 ஜல்லிக்கட்டு நிகழ்விலும் குழு அமைத்து முறையாக கண்காணித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குரிய ஏற்பாடுகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.


Tags : Icord ,District Collector ,Madurai ,Collector of Jallikattu ,Icorte , Madurai, Jallikattu, Security, Bookkeeping, Report, Collector, Icort Order
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...