×

அரிமளம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் கஜாபுயலில் வேரோடு சாய்ந்த மரத்தை அகற்றப்படாத அவலம்: ஆம்புலன்ஸ் செல்லமுடியாமல் குவிக்கப்பட்ட மரதுண்டுகள்

திருமயம்: அரிமளம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் கஜா புயலின் போது வேரோடு சாய்ந்த ராட்சத மரம் அகற்றபடாதோடு சேதமடைந்த சுற்றுச் சுவர் சரிசெய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஆரம்ப சுகாதார மையம் அப்பகுதி மிகவும் பாரம்பரியம் மிக்கதும், முக்கியமானதும் ஆகும். இங்கு அரிமளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் சுமார் 100 மேற்பட்ட நோயாளிகள் அங்கு பணிபுரியும் அரசு மருத்துவரிடம் சிகிச்சை, ஆலோசனை பெற்று வருகின்றனர். இது படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை என்பதால் தங்கி சிகிக்சை பெற கூடிய நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது அரிமளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து ராட்சத வேம்பு ஒன்று மருத்துவமனை சுற்றுச் சுவரில் சாய்ந்தது. இதில் சுமார் 20 அடி நீளத்திற்கு மருத்துவமனை சுவர் முற்றிலும் சேதமடைந்தது.

இதனை தொடர்ந்து மரம் சாய்ந்த நீண்ட நாட்களுக்கு பிறகு மரத்தில் உள்ள கிளைகள் அகற்றப்பட்டு தற்போது மரத்தில் அடிப்பாகம் அகற்றபடாமல் உள்ளது. இதனிடையே புயல் வந்து ஒன்றரை ஆண்டை கடந்த நிலையிலும் இது வரை சாய்ந்த மரம் அகற்றப்படாததோடு சாய்ந்த மரம் சேதபடுத்திய மருத்துவமனை சுற்றுசுவர் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அருகில் உள்ள புதர் காட்டிலிருந்து மருத்துவமனை வளாகத்திற்குள் விஷ பூச்சிகள் வருமோ என்ற அச்சத்தில் இரவில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் உள்ளதாக தெரிவத்தனர். மேலும் அகற்றப்பட்ட மரத்தின் கிளைகள் மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் வந்து செல்லும் கேட்டு அருகே போட்டு வைத்திருப்பதால் ஆம்புலன்ஸ் மருத்துவ மனைக்குள் வந்து செல்வதில் சிரமம் உள்ளதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் ஆம்புலன்ஸ் வந்த வழியே திரும்பி வெளியேற வேண்டி உள்ளது. இந்நிலையில் அவர காலம் வந்தால் ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரில் மரம் விழுந்து சேதமடைந்த பகுதியை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, மருத்துவனையில் பயன்படுத்தாமல் இருக்கும் ஆம்புலன்ஸ் வந்து செல்லும் கேட்டை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Non-removal , Disposal ,Rooted Tree,Kajabuyil , Arimalam Primary Health Complex
× RELATED மயான ஆக்கிரமிப்பு அகற்றாததை...