×

காரில் பதுக்கி கஞ்சா கடத்தல் : பேராசிரியர் உள்பட இருவர் கைது

ஆவடி: கொரட்டூர், கெனால் ரோட்டில் சப்.இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வந்த காரை போலீசார் சோதனை செய்தபோது 1.4 கிலோ கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது.  கஞ்சாவை பறிமுதல் செய்து காருடன் இரு வாலிபர்களையும் கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் பாடி, சீனிவாசன் நகர், காமராஜர் 2வது தெருவை சேர்ந்த ரிச்சர்டு (26) என்பதும், மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருவதும் தெரிந்தது. மேலும், அவருடன் வந்த நபர் அண்ணாநகர் மேற்கு விரிவு, பார்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சட்ட கல்லூரி இறுதியாண்டு மாணவர் ராஜராஜன் (22) என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Tags : Ganja ,smuggling , Cannabis trafficking, two arrested
× RELATED ஊத்துக்கோட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது