×

காட்டூர் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க விசிக கோரிக்கை

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூர் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் அதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்திட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவாரூர் அருகே காட்டூர் மற்றும் அகரத்திருநல்லூர் பகுதிகளில் ஒருசிலர் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து நாசம் செய்வதுடன் இந்த பன்றி களுக்காக கோழி கழிவுகள் மற்றும் ஓட்டல் கழிவுகள் போன்றவை உணவாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

இந்த கழிவுகளை பன்றிகள் மட்டுமின்றி நாய்களும் சேர்ந்து தின்பதால் இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களும் சுற்றித்திரிந்து வருகின்றன. இதன்காரணமாக இந்த பகுதியில் இருந்துவரும் ஆடு,மாடுகளை இந்த நாய்கள் விரட்டி பிடித்து கடித்து கொன்று தின்று வருகின்றன. இதுமட்டுமன்றி இந்த பகுதியில் உள்ள சுடுகாடுகளில் இறந்தவர் உடலை அடக்கம் செய்யும்போது இரவு நேரங்களில் இந்த உடல்களை பன்றிகளும்,நாய்களும் சேர்ந்து மண்ணை தோண்டி தின்று வரும் நிலை இருந்து வருகிறது.

மேலும் இந்த பன்றிகளில் நோய்வாய்ப்பட்ட பன்றிகள் இறக்கும் பட்சத்தில் அவைகள் முறையாக புதைக்கப்படாமல் அருகில் இருந்து வரும் ஓடம் போக்கி ஆற்றங்கரைப் பகுதியில் வீசப்படும் நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே காட்டூர் மற்றும் அகரத்திருநல்லூர் பகுதியில் பன்றிகள் மற்றும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Kadur , Cows, swine and disease are at risk
× RELATED 10 மாவட்ட அதிகாரிகளின் வீடுகளில்...