×

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 % ஆக குறையும்: மத்திய அரசு தகவல்

டெல்லி:  ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஜிடிபி என்ற எனப்படும் உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் 2019-2020 ஆம் ஆண்டில்  இந்தியாவின்  ஜிடிபி வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்குமென கிரிஷில் நிறுவனம் கணித்திருந்த நிலையில்  ஜிடிபி 5 சதவீதமாக குறையும் என மத்திய அரசு கணித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய புள்ளியியல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் 2013-2014 ஆம் ஆண்டியில் 6.4 சதவீதமாக இருந்த இந்தியாவின்  ஜிடிபி  வளர்ச்சி விகிதம் 2018-2019 நிதியாண்டின்  இறுதியில் 5.8 சதவீதமாக குறைந்தது. மேலும் 2020-2021ஆம் ஆண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.  அதிலும் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் 2019-20 ஆம் ஆண்டில் 4.3 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

இது முந்தைய ஆண்டில் 5.6 சதவீதமாக இருந்தது, தற்போதைய விலைவாசி  அடிப்படையில் மொத்த நிலையான மூலதன  உருவாக்கம் 2019-20ஆம் ஆண்டில் 57 கோடி 42 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 55 கோடி 70 லட்சமாக இருந்தது. தற்போது வேளாண், கட்டுமானம், மின்சாரம், எரிவாவு, தண்ணீர் விநியோகம் போன்ற துறைகளின் வளர்ச்சியிலும் சரிவு காணப்பட்டுள்ளதாகவும்,  அதே சமயம் சுரங்கம், பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட சிலத் துறைகளில் சிறிய வளர்ச்சி தென்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Tags : Economy, Growth, Decline, Federal Government, Information
× RELATED இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார...