×

ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் 2022ம் ஆண்டு வரை நீட்டிப்பு: சட்டபேரவையில் துணை முதல்வர் பதில்

சென்னை: தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டம் வரும் 2022 வரை நீட்டிக்க இருப்பதாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா?  என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் க.அன்பழகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அரசு ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய ஓ. பன்னீர்செல்வம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், முதல் கட்டமாக கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2018ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கான மருத்துவ காப்பீடு ரூபாய் 2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இந்த திட்டம் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை சில சிறப்பு அம்சங்களுடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் என மொத்தம் 144 வகையான சிகிச்சைகள் பெறலாம். மேலும் 4 லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு அம்சங்களுடன் 2022ம் ஆண்டு வரை காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை அடுத்து, புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை, சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைகள் போன்ற சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் வரை காப்பீடு பெரும் வகையிலும், புதிய காப்பீட்டு திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க உள்ளதாகவும் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Tags : Deputy Chief Minister ,reply Pensioners , Pensioner, Insurance Plan, 2022, Extension, Legislature, Deputy Chief Minister, Respondent
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு