×

ஊராட்சி வார்டு உறுப்பினர் பார்வதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “கலைஞர் அறிய” என்று சொல்லி பதவிப்பிரமாணம் செய்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பார்வதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஊராட்சி  வார்டு உறுப்பினராக பதவியேற்ற சகோதரி பார்வதி, “கலைஞர் அறிய” என்று சொல்லிப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட காட்சி தந்த பெருமிதத்தால், என் கண்கள் குளமாயின. கலைஞரின் உழைப்புக்கு எத்தகைய உயிர்ப்பு சக்தி இருக்கிறது  என்பதற்கு உதாரணம் இந்த சகோதரி. வாழ்த்துக்கள் பார்வதி.


Tags : Parvathi ,MK Stalin ,Panchayath Ward , Member of Panchayat Ward Parvati, MK Stalin
× RELATED கல்பாக்கம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது