×

ரசாயன பூச்சி கொல்லி மருந்துக்கு தடை விதிக்க எதிர்ப்பு: ஊட்டியில் பேரணி, கடையடைப்பு போராட்டம்

ஊட்டி: ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கக்கூடாது என வலியுறுத்தி ஊட்டி மார்க்கெட் வளாகம் மற்றும் உழவர் சந்தையில் உள்ள கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர்  பரப்பளவில் தேயிலை விவசாயமும், 7 ஆயிரம் ஹெக்டரில் மலை காய்கறிகளும் பயிாிப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் அதிகமான ரசாயன உர பயன்பாட்டால் நிலம் மற்றும் நீர் கடுமையாக மாசுப்பட்டுள்ளது. ரசாயன உரங்கள்  தொடர்ச்சியான பயன்பாட்டால் மக்களுக்கு புற்றுேநாய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.  இதனால், நீலகிரியை இயற்கை விவசாய மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ெதரிவித்தது.  நீலகிரியை அடுத்த 3 ஆண்டுக்குள் இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோண முத்திரை கொண்ட களைகொல்லி, பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை விவசாயிகள் குறைத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், ரசாயன பூச்சி கொல்லி  மருந்துகளுக்கு தடை விதிக்கக்கூடாது என கூறி விவசாய அமைப்புகள் சார்பில் ஊட்டியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. உழவர் சந்தையில் உள்ள கடைகளும் திறக்கப்படவில்லை. இதனிடையே ரசாயன பூச்சி கொல்லி  மருந்துகளுக்கு தடை விதிக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய கோரி விவசாயிகள் ஊட்டியில் பேரணி நடத்தினர். தொடர்ந்து டிபிஒ. சந்திப்பு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம்  போக்குவரத்து பாதித்தது.



Tags : protest ,Ooty , Chemical Pesticides, Prohibition of Drugs, Ooty, Rally, Shop Breakdown
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...