×

புகையில்லா போகி கொண்டாடுவது எப்படி? மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை: புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மரம் வளர்த்தவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘புகையில்லா போகி’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியை எழிலரசி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சியில் 1,600 மாணவியர்கள் மற்றும் 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர். போகியன்று டயர், டியூப், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்ற பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவியர்களிடையே விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதன்பிறகு அனைவரும் புகையில்லா போகியை கொண்டாடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், சுற்றுச்சூழல் துறையின் ஒத்துழைப்புடன் எனது பள்ளி - எனது மரம் திட்டத்தின் கீழ் பள்ளியில் மரம் வளர்த்து பாதுகாத்த 50 மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Tags : Smokeless bogey, student, awareness
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...