×

மீஞ்சூர் அருகே தேர்தல் தகராறு வாலிபர் அடித்துக்கொலை

சென்னை : மீஞ்சூர் அருகே தேர்தல் தகராறில் இரும்பு கம்பியால் அடித்து வாலிபரை கொன்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூர் அடுத்த காட்டூர் அருகே  வேலூர் பூந்தோட்ட காலனி பகுதியை சேர்ந்தவர்கள் குமார் (30), புஷ்பராஜ் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். குமாருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள்.  பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தேவையான கேக் வாங்க  இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவெள்ளவாயில் பஜாருக்கு சென்றனர். அங்கிருந்து தேவைாயான பொருட்களை வாங்கிக்கொண்டு எரிப்பில்லிகுப்பம் கிராமம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை திருவெள்ளவாயில் மாதா கோவில் தெருவை சேர்ந்த தலித் பாண்டியன் மகன் உமா பரத் (25), பூச்செண்டு மகன் பரத் (25), அஜித் (24), ஸ்டாலின் (25), பிரதாப் (18) மற்றும் சிலர் சேர்ந்து மடக்கி நிறுத்தினர். பின்னர், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு எதிராக ஏன் பிரசாரம் செய்தீர்கள் என கேட்டு தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து குமார் மற்றும் புஷ்பராஜை சரமாரியாக  இரும்பு ராடால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் கூச்சலிட்டபடி சரிந்தனர்.

அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடினர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புஷ்பராஜ், குமார் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  புஷ்பராஜ் இறந்தார். குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி  5 வாலிபர்களை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், 7 வாலிபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Election dispute youth ,Meenkoor Meenkoor , Election dispute, Meenkoor slaughter ,youth
× RELATED மீஞ்சூர் அருகே தேர்தல் தகராறு வாலிபர் அடித்துக்கொலை