×

பல கோடி ஜிஎஸ்டி மோசடி கண்டுபிடிப்பு ஏற்றுமதியாளர்களை கண்காணிக்க உத்தரவு : வசூலை அதிகரிக்க கெடுபிடி நடவடிக்கை

புதுடெல்லி: ஏற்றுமதியாளர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு, வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குனர் ஜெனரல் அலுவலகத்துக்கு மத்திய மறைமுக வரிகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் ஆகவில்லை. இதனால் மாநிலங்களுக்கு தர வேண்டிய இழப்பீடு தொகையை வழங்க இயலவில்லை என மத்திய அரசு கூறிவருகிறது. வருவாய் குறைந்ததற்கு போலி பில்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்தது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு, அவர்களின் ஆண்டு வர்த்தகம், ஏற்றுமதி மதிப்பு போன்றவற்றுக்கு ஏற்ப ஸ்டார் அந்தஸ்து வழங்கப்படுகிறது. இவற்றில் சில  நிறுவனங்கள் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. உதாரணமாக, ரெடிமேட் ஜவுளி ஏற்றுமதியாளர் ஒருவர் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார். இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து 3.90 கோடி வரி ரீபண்ட் கோரியுள்ளார். ஆனால், அவர் உண்மையில் செலுத்திய ஜிஎஸ்டி 1,650 மட்டுமே.

மேலும், ஸ்டார் அந்தஸ்து கொண்ட சுமார் 9 ஏற்றுமதியாளர்கள், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் உள்ள முகவரியில் இல்லை. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, ஸ்டார் அந்தஸ்து கொண்ட ஏற்றுமதியாளர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குனர் ஜெனரல் அலுவலகத்துக்கு மத்திய மறைமுக வரிகள் வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரீபண்ட் விவரங்கள், ஜிஎஸ்டி படிவத்தில் அவர்கள் தாக்கல் செய்த விவரங்களை ஆராய வேண்டும். பிற அமைப்புகளிடம் சரிபார்ப்பு விவரங்கள் கேட்டு அல்லது, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க ஏற்றுமதியாளர்களை வலியுறுத்துவது, வங்கிகளில் கடன் நிலுவை இருக்கிறதா? என்பது உட்பட பல்வேறு விவரங்களை ஆய்வு செய்து, போலி பில் மூலம் வரி மோசடி நடந்துள்ளதா என ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

* ஸ்டார் அந்தஸ்து கொண்ட ஒரு ஏற்றுமதி நிறுவனம் ரெடிமேட் ஜவுளிகளை 50 கோடிக்கு ஏற்றுமதி செய்ததாக, 3.90 கோடி ரீபண்ட் கோரியுள்ளளது. ஆனால், இதற்காக செலுத்திய ஜிஎஸ்டி வெறும் 1,650தான்.
* சுமார் 9 ஏற்றுமதி நிறுவனங்கள், ஆவணங்களில் அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் இல்லை. எனவே, சந்தேகத்தின்பேரில் ரீபண்ட் விவரங்களை கடுமையாக ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : GST fraud detection exporters , monitor multi-crore GST fraud, detection exporters
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...