×

அதிமுக மாஜி அமைச்சர் காலமானார்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த இரணியமங்கலம் ஊராட்சி வளையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் (86). இவர், ஜெயலலிதா அணியில் 1989ல் முதன்முதலில் சேவல் சின்னத்தில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தொடர்ந்து 1991, 2001, 2011 என 4 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் 2003ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது மாநில அமைப்புச் செயலாளராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். வயது முதிர்வின் காரணமாக நுரையீரலில் நோய் தொற்று பாதிப்பில் கடந்த ஒரு வாரமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை பாப்பாசுந்தரம் மரமணடைந்தார். இவருக்கு பாலாமணி என்ற மனைவியும், 2 மகன், ஒரு மகள்உள்ளனர். இன்று காலை 10 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. …

The post அதிமுக மாஜி அமைச்சர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Kulitalai ,Former minister ,Papasundaram ,Iraniyamangalam panchayat ,Kulaitalai ,Karur district ,Dinakaran ,
× RELATED 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண்...