×

தேசிய மக்கள் தொகை பதிவேடு கையேட்டில் முஸ்லிம் பண்டிகைகள் நீக்கம்: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:  அனைத்து மாநிலங்களிலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடத்துவதற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வழக்கமாகக் கொண்டாடப்படும் இந்து மதப் பண்டிகைகள் மற்றும் மகாவீர் ஜெயந்தி,  புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி, குருகோவிந்த் சிங் ஜெயந்தி மற்றும் புத்தபூர்ணிமா போன்ற சமண, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த பண்டிகைகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் முஸ்லிம்  பண்டிகைகளான ரம்ஜான், மீலாது நபி போன்றவை இடம்பெறவில்லை.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில், 13 விழுக்காடாக உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களின் பண்டிகைகளை திட்டமிட்டே பாஜ அரசு மக்கள் தொகைப்  பதிவேட்டின் கையேட்டில் புறக்கணித்து இருக்கிறது.  பாஜ அரசின் இத்தகைய போக்கு கடும் கண்டனத்துக்குரியது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு கையேட்டில் இஸ்லாமிய பண்டிகைகளையும் உடனடியாகச் சேர்க்க வேண்டும். மக்களாட்சிக்கு எதிரான பாஜ அரசின் இத்தகைய போக்குகள்  உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்.

Tags : Muslim Festivals ,Vaiko , Elimination of Muslim Festivals in the National Population Record Handbook: Vaiko condemns
× RELATED டெல்டா விவசாயிகளின் நலன் காக்க பாடுபட்டவர் : வைகோ புகழாரம்